யூத் ஒலிம்பிக்: அரையிறுதிக்கு முன்னேறிய தான்வி பத்ரி.
யூத் ஒலிம்பிக் போட்டியின் 4வது சீசன் செனகலில் நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 2,654 இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 6 வீரர்கள், 11 வீராங்கனைகள் என மொத்தம் 17 பேர், 11 விளையாட்டுகளில் களமிறங்கியுள்ளனர்.
பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி பத்ரி, தாய்லாந்தின் குங்க யேவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தான்வி, 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் யூத் ஒலிம்பிக் பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மேலும், இந்தியாவின் பிரனாய், லக்சயா சென் ஆகியோருக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அரையிறுதியில் தான்வி, ஜப்பானின் யுஜுனோ வதனபேவை எதிர்கொள்கிறார்.
இதுவரை இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
0
Leave a Reply