5 கிலோ ரேஷன் பச்சரிசிக்கு இடியாப்ப மாவு அரைக்கும் முறை.
தேவையான பொருட்கள்: ரேஷன் பச்சரிசி – 5 கிலோ, ஜவ்வரிசி – 250 கிராம்.
அரைக்கும் முறை: ரேஷன் பச்சரிசியை 2 முதல் 3 முறை நன்றாகக் கழுவி, ஈரம் போகக் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து மில்லில் கொடுத்து நைசாக அரைத்து, நன்றாகச் சலித்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.
சிறப்பு குறிப்புகள்:
இந்த விகிதத்தில் அரைத்தால் இடியாப்பம் மிகவும் மென்மையாகவும், நூல் நூலாக நன்றாகவும் வரும்.
மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
இடியாப்பம் பிழியும் போது உடையாமல் அழகாக வரவும், வேக வைத்த பிறகும் மிருதுவாக இருக்கவும் இந்த முறை உதவும்.
0
Leave a Reply