25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


'வானர சைன் யங்கள்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'வானர சைன் யங்கள்'

 விடுமுறை குஷியில் குழந்தைகள் கொண்டாட, பெற்றோர்களுக்கு வானர சைன்யங்களின் படை யெடுப்பை என்ன செய்வது? என்ற கலக்கல்கள் நிச்சயம். சில விஷமங்கள் நினைத்து, நினைத்து காலம் பூராவும் சிரிக்க வைக்கின்றன. காலேஜ் பிள்ளைகள் வீட்டிற்கு லேட்டாக வருவது பெண் பிள்ளைகள் தோழியிடம் பேசுகிறேன் என்று சல் மான்கான், சாருக்ஹான்,விஜய் கட்சி ஆரம்பித்தது பற்றிய விவாதங்கள்IPL  கிரிக்கெட் பிளேயர்ஸ் பற்றிய கருத்துக்கள், அம்பானி வீட்டு கல்யாண விஷயங்கள், சீமான், அண்ணாமலை பற்றிய பேச்சுக்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. செல்போன் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர். செல்போன் ரீசார்ஜ் செய்ய பணம் கேட்டுத் தொல்லை பிறந்த குழந்தைகளில் இருந்து கிடு கிடு தாத்தா வரைக்கும் செல்போன்தான். போன்பில்கள், செல்பில்கள் எகிறுகின்றன.

 இப்போ பள்ளிக் கூட குட்டீஸ் புராணம் போகலாமா?இன்றைய பெற்றோர்கள் உலகத்தில் உள்ள எல்லா கலைகளும் தங்கள் குழந்தைகள் கற்க வேண்டும். விஷமம் மாத்திரம் பண்ணக்கூடாது."விஷமக்கார கண்ணன்' என்ற பாடலில் கண்ணன் செய்யும் எல்லா குறும்பு விளையாட்டுக்களையும் சொல்லி மகிழ்ந்து சிரித்து, அக்கண்ணனை வணங் கவும் செய்கிறோம். நடைமுறையில் நம் குழந்தை கள் செய்வதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

தன் ரப்பரைக்காணும் என்று6வயது குட்டி கண் கசக்க2 வயது குட்டி சமத்தாக உட்கார்ந்து ரப்பரை ருசி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த தாய்க்கு எப்படி இருக்கும். எட்டு வயது வாண்டு வாசிங் மிஷினில் வாட்டர் கலரை கொட்டி தண்ணீர் ஊற்றி அப்பாவுடைய வெள்ளைத் துண்டை போட்டு எப்படி நிறம் மாறுகின்றது என்று கவனிக்கிறான். இன்னொருவர் வீட்டிலுள்ள தாத்தா காலத்து கடிகாரத்தை தனித் தனியாகப் பிரித்து இன்ஞினியரிங் வேலை புது சோப்பை ஒரு பக்கெட் தண்ணீரில் கரைப்பது, பக்கத்து வீட்டுக்குச் சென்று மாமி எனக்கு சாப்பாடு வைய்யுங்கோ,எங்க வீட்டு சாப்பாடு சகிக்கலை இப்படிக் கொஞ்சம்.

தாத்தா பல் செட்டை எடுத்துக் கொண்டு போய் எங்காவது ஒளித்து வைத்துவிடுவது. பாட்டியுடைய தண்ணீர் செம்பில் தான் தண்ணி குடிப்பேன் என்று அடம் பிடிப்பது, பாட்டி தாத்தாவிடம் கதை சொல்லும் படி அடம் பிடிப்பது. மதிய நேரம் கண் சொக்கும் நேரத்தில் அம்மா பாட்டி என்று செல்ல மாகக் கொஞ்சுவது. பபுள்கம்மை நன்றாக மென்று சோபாவில் ஒட்டுவது.பாட்டு, டான்ஸ், கராத்தே, நீச்சல் என்று எல்லா கிளாசிற்கும் சென்று விட்டு வந்தே இவ்வளவு என்றால் வீட்டிலேயே வைத்திருந்தால் என்னாகும். எப்படி குழந்தைகளின் விஷயங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பதைப் பற்றி கூட பெற்றோர்களுக்கு வித்தியாசமாக கிளாஸ் எடுத்தால் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.Preschool எங்கு பார்த்தாலும் காளான் போல முளைத்து விட்டது. வித்தியாசமாக பெற்றோருக்கு ஸ்கூல் எடுக்கலாமே! நல்ல வியாபாரம்!

தூங்கிக் கொண்டிருக்கும் அண்ணன், அக்கா, தங்கை, தம்பிக்கு மீசை வரைந்து விடுதல் உறவினர்கள் வீட்டிற்குள் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தால் அவர்களைப் பார்த்து எப்போ நீங்க வீட்டுக்கு போ வீங்க என்று கள்ளங்கபடமில்லாமல் கேட்பது12லிருந்து18வரை காது செவிடாகும் படியாக பாட்டை சப்தமாக விட்டு உல்லாசமாக டான்ஸ் ஆடி பெற்றோர்களின், பக்கத்து வீட்டுக்காரர்கள் மண்டைவலி டென்ஷன் எல்லாமே எகிறிவிடுகின்றது. அதுவும் ரிடையர்ட் பெரிசுகளுக்கு” என்ன வந்தது இந்த வானர சைன்யங்களுக்கு” என்று ஆச்சரியப்படுகின்றனர். இப்படிக் கேட்காதீங்க நல்ல கதை கேளுங்க என்று மகாபாரதக் கதைக் சொல்லும் பொழுது பீமனுடைய பலத்தை விமரி சிக்கும் பாட்டியிடம் குழந்தை விஜய், விஷால்(நடிகர்கள்) மாமாவை விடவா பலசாலி என்று கேட்கின்றனர். நீ சக நண்பர்களுடன் நீ பீமன் நான் விஜய் நீ விஷால் என்று டிஸ்யும் செய்ய ஆரம்பித்து பீமனை தோற்கடித்து விட்டு“பாட்டி பாத்தியா பீமனால் விஜய், விஷாலை சமாளிக்க முடியாது” என்று எள்ளி நகையாடுகின்றனர்.

கம்ப்யூட்டரில் கூகுள் சர்ச் செய்து எல்லா விஷயத்தையும் அலசி ஆராய்வது. கூகுள்க்கு தெரியுமா? இது சர்ச் செய்வது 5 வயதுப் பையன் என்று அம்மா, அப்பா செல்லை எடுத்துக் கொண்டு போய் பதுங்கி இருந்துஅதை ஆட்டை போடுவது,செல்போன் எனக்கு வேண்டும், உனக்கு வேண்டும் என்ற சண்டை குழந்தைகளிடையே இவற்றையெல்லாம் தாண்டி அம்மாவும், அப்பாவும் செல்போன் பார்க்க நேரம் தேடுவது என்று ஒரே அல்லோகளம் தான்.அவர்களை இழுத்துப் பிடித்து உட்கார வைத்து கார்ட்டூன் சுட்டிடிவி பார்க்க வைக்கின்றனர். இதை பார்த்து விட்டு வேறு விதமான எதிர்பாராத விஷ மங்கள் கூடுகின்றன. என்ன தான் கம்யூட்டர் காலமானாலும் காலத்திற்கேற்ப விஷமங்கள் கூடிக் கொண்டே செல்கின்றன. குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற ஆராய்ச்சியின் முடிவு இந்த வானர சைன்யங்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம்.

ஜீன்1ஆம் தேதி முதல் இந்த சைன்யங்கள் அடுத்த வருடத்து தாக்குதலை தயார் படுத்திக் கொண்டு 2025 ஏப்ரலுக்காக காத்துக் கிடக்கின்றனர். இந்த அன்புத் தொல்லை 'வானர சைன் யங்கள்' 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News