தேசிய ஜூனியர் ஹாக்கி: புதுச்சேரி அபார வெற்றி.
கோவையில் நடைபெற்று வரும் 16-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் அசாம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோவா - ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் 3-3 என டிராவில் முடிந்தது.
மற்ற போட்டிகளில் தெலுங்கானா 3-0 என்ற கோல் கணக்கில் திரிபுராவை வீழ்த்தியது. புதுச்சேரி அணி 10-0 என்ற கோல் கணக்கில் குஜராத்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. சண்டிகர் அணி 9-2 என்ற கோல் கணக்கில் சத்தீஸ்கரை வென்றது. தொடரின் அடுத்த கட்ட போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
0
Leave a Reply