காமன்வெல்த் கபடி: அரையிறுதியில் இந்திய மகளிர் அணி.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் முதலாவது காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 13 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் பங்கேற்றுள்ளன.
'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் நைஜீரியாவை எதிர்கொண்டது. ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 38–10 என்ற புள்ளிக் கணக்கில், 28 புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ச்சியாகப் பெற்ற 4-வது வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, கம்பீரமாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
0
Leave a Reply