டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு தினமான 27.10.2022 அன்று ஒருநாள் மட்டும் தற்காலிமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு, 27.10.2026-ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் நினைவு தினத்தன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்எல்-1, எப்எல் -2, மற்றும் எப்எல் -3 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (எப்எல் -1) எப்எல் -2 மற்றும் எப்எல் -3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply