உலகின் மிகவும் புத்திசாலி காகம் New Caledonian crows
மனிதர்கள் தன் வாழ்வில் ஒவ்வொரு வேலைகளுக்கும் கருவிகளை பயன்படுத்துவார்கள். அதேபோல் ஒரு காகம் தனது உணவை எடுப்பதிலிருந்து அனைத்திற்கும் கருவிகளையே பயன்படுத்தும் இந்த New Caledonian காகம் . அப்போது யார் அந்த கருவிகளைச் செய்து கொடுப்பார்கள் என்ற சந்தேகம் வருகிறதா.இந்த வகையான காகங்கள் தெற்கு பசிபிக் தீவில் தான் பூர்விகமாக வாழ்ந்து வருகின்றன. இந்தக் காகங்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு, தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்துத் தப்பிப்பதற்கு, உணவு கண்டுப்பிடிப்பதற்கு என அனைத்திற்குமே அதற்கான கருவிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து சில தகவல்களைக் கூறினார்கள். ஒருமுறை காடுகளில் கண்டறியப்பட்ட இந்த இனத்தின் காகம் ஒன்று, இரையை எடுக்கும் காட்சியை நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள்.அந்தக் காகம் ஒரு சிறிய மரத்தின் பொந்தில் புழு இருப்பதைப் பார்த்திருக்கிறது. அதனை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வெகுநேரம் மூக்கினால் எடுக்க முயற்சி செய்து வந்தது. ஆனால் புழு சிக்காமல் தப்பித்துக்கொண்டே இருந்தது. இதனால் பொறுமை இழந்த காகம் பறந்து சென்று ஒரு மெலிதான குச்சியை எடுத்து வந்து புழுவை எடுக்க முயற்சித்தது. அதுவும் அந்தப் புழுவின் மூக்கில் சரியாக விட்டு எடுக்க முயற்சித்தது. அப்படி முயற்சிக்கையில் மற்றொரு சிக்கலும் வந்தது. குச்சி நீளமாக இருந்ததால் அதனை கையாளத் தடுமாறியது. பிறகு அதனை மடக்கி, புழுவின் மூக்குப் பகுதியில் விட்டு அழகாக வெளியில் எடுத்து அந்தப் புழுவை சாப்பிட்டது.
எப்படி இந்தப் புழுவை எடுப்பதற்கு ஒரு கருவியை வளைத்து நெளித்து பயன்படுத்தியதோ, அதேபோல்தான் மற்ற அனைத்திற்கும் தானே குச்சிகள் போன்ற இயற்கை பொருட்களால் அதுவே கருவிகளை செய்யும். இதனை பெற்றோர்களோ இல்லை மற்றவர்களோ யாருமே அதற்கு சொல்லித்தர மாட்டார்கள். அதுவே தன் சுய புத்தியினாலும் அனுபவத்தினாலும் மட்டுமே கருவிகளைச் செய்யும்.மற்ற பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தப் பறவைக்குத்தான் உடலளவுடன் ஒப்பிடுகையில் பெரிய மூளை உள்ளது. அதேபோல் அதிக அளவு குரல் ஒலிகளைக் கொண்டதும் இந்தப் பறவைத்தான். காகங்களுக்குள் தொடர்புக்கொள்கையில் இவை பல விதமான குரல்களைப் பயன்படுத்துகின்றன.இந்த New Caledonian காகம்தான் மிகவும் புத்திசாலியான காகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
0
Leave a Reply