25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் .

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 முதல் 06.04.2026 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,, அவர்கள் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் கால அட்டவணை மற்றும் இடங்கள்:

          இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை 30.03.2026 (திங்கட்கிழமை) முதல் வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்பாளர்கள் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடங்கள்:

இராஜபாளையம்: இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): ஸ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

சாத்தூர்: சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

சிவகாசி: சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

விருதுநகர்: விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம். 

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

திருச்சுழி: திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்.

விடுமுறை நாட்கள் மற்றும் கடைசி நாள்:

 1881 ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், அரசால் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை), 01.04.2026 (புதன்கிழமை), 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

நபர்களின் எண்ணிக்கை: வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் செல்ல அனுமதி உண்டு.

வாகனக் கட்டுப்பாடு: தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

 பாதுகாப்பு ஏற்பாடுகள்: வேட்புமனு தாக்கல் நடைபெறும் அனைத்து அலுவலகங்களிலும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை (Model Code of Conduct) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News