25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஒன்றிய அரசின் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2025) வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒன்றிய அரசின் இணை செயலாளர்(பயிர்கள்) திருமதி இனித்தா அவர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்(தோட்டக்கலைத்துறை) முனைவர் என்.கே.பட்லா அவர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், 2024-2025 நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட மத்திய திட்டங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய திட்டங்கள் செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், பயிர் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்துவதற்கும், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில்,இணைஇயக்குநர்(தரக்கட்டுப்பாடு)முனைவர்சுபாஷ்குமார்,கூடுதல்இயக்குநர்கள்திரு.ராம்பிரசாத்(தோட்டக்கலைத்துறை), திரு.சங்கர் சுப்பிரமணியம்(வேளாண்மைத்துறை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி சுமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி சுபாவாசுகி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News