25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய வீரர்கள் அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய வீரர்கள் அசத்தல்.

ஜப்பானின் அய்ச்சி மாகாணம், நகோயாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் இந்தியா சார்பில் 112 வீரர்கள், 56 வீராங்கனைகள் என மொத்தம் 168 பேர், 11 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

போட்டிகளின் தொடக்கமாக பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், பார்வையற்றோருக்கான கால்பந்து மற்றும் வீல்சேர் கூடைப்பந்து ஆகியவற்றின் லீக் சுற்றுகள் தொடங்கின.

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினா படேல் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். 'கிளாஸ் 4-5' பிரிவின் 'ஏ' பிரிவில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், குவைத் வீராங்கனை அஹத் அல்ரஷீதியை எதிர்கொண்டார். இதில் பவினா 11-6, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் 3-0 என வெற்றி பெற்றார்.

பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் வெற்றியைப் பதிவு செய்தனர். 'எஸ்.எல்.4' பிரிவின் 'இ' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ், வங்கதேச வீரர் ஜோய்து தாரை 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அபிஜீத் சகுஜா, சீனதைபே வீரர் என்-சுவான் யேவை 21-17, 21-12 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

மேலும், ஆண்களுக்கான 'எஸ்.எச்.6' பிரிவு போட்டிகளில் இந்திய வீரர்கள் கிருஷ்ணா நாகர் மற்றும் சிவராஜன் சோலைமலை ஆகியோரும் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News