மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் 28.11.2026 அன்று நடைபெறவுள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்புத்துறையுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வழிகாட்டு மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் 28.11.2026 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, UDID அட்டை, கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வேலைவாயப்பினை உருவாக்கிடும் பொருட்டு வருகை தருவதால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். எனவே இவ்வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply