வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், 2026–2027 நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில், 3,000 காற்றாலை இறக்கைகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 30.43% வளர்ச்சியாகும்.
மேலும், காற்றாலை இறக்கைகளை ஏற்றி வந்த கப்பல்களின் எண்ணிக்கையும் 64-லிருந்து 70-ஆக அதிகரித்துள்ளது.
துறைமுகத்தின் சரக்குக் கையாளும் திறன் மற்றும் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது!
0
Leave a Reply