ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்.
தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில்,பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் சத்யன் ஞானசேகரன், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 4–1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என மேற்கு வங்கத்தின் அங்கூரை வென்று சாம்பியன் ஆனார்.
ரிசர்வ் வங்கி அணியின் தியா, பெண்கள் ஒற்றையர் பைனலில் ரயில்வே அணியின் சுதிர்தாவை 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தமிழகத்தின் ஹன்சினி 'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
0
Leave a Reply