25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புற்றுநோய்க்கு காரணமாகும்  சிவப்பு இறைச்சி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோய்க்கு காரணமாகும் சிவப்பு இறைச்சி.

மனித இனத்தை அச்சுறுத்தும் அபாயகரமான குடல் புற்றுநோய். உலகஅள வில் குடல் புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் மிக அதிகம். இதைத் தடுப்பதற்கான வழிகளை விஞ் ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள என்.சி.சி.எஸ். எனும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. 

குடல் புற்றுநோயை அதிகப் படுத்துவதில் டெலோமெரேஸ் (Telomerase) என்னும் ஒரு நொதிக்கு முக்கியமான பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யஎஸ்பி 2509 என்னும் ஒருமூலக் கூற்றைப்பயன்படுத்த முடியும். இந்தக்  கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பெரிய புரட்சியாக இருக் கும் என்று கூறப்படுகிறது.இது ஒரு பக்கம் இருக்க டெலோ மெரேஸ் நொதிக்கும் நம்முடைய உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது.

சிவப்பு இறைச்சியை அளவுக்கு அதிகமாக உண்பது குடல் புற்றுநோய் ஏற்பட வழி வகுக்கும் என்று ஆய்வாளர்கள் கண் டறிந்திருக்கிறார்கள்.ஆடு, பன்றி, மாடு உள் ளிட்டவற்றின் இறைச்சி சிவப்பு இறைச்சி என்று பொதுவாக அழைக் கப்படுகிறது. இதை அதிக அளவில் உண்பதால் பல்வேறு உடல் கோளாறுகள் ஏற்படும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இறைச்சியில் இருக்கும் இரும்புச் சத்து உடலுக்கு நல்லது தான்  என்றாலும் கூட, அளவை மீறும் போது இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

இந்த இரும்புச் சத்து தான் டெலோமெரேஸ் உற்பத்தியை அதிகப்படுத்தி புற்றுநோயை வேகப்ப டுத்துகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.எனவே காய்கறி, பழங்கள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிக அளவில் சேர்த்துக்கொண்டு சிவப்பு இறைச்சிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News