T-20 உலக கோப்பை இந்தியாவில் நடத்த மறுப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி. சார்பில் வங்கதேசத்தில் பெண்களுக்கான T-20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கவுள்ளது. கலவரம் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, வெளிநாட்டுக்கு சென்று விட்டார். அங்கு ராணுவம் ஆட்சி அமைத்துள்ளது. இதனால் வங்கதேசத்தில் இருந்து உலக கோப்பை தொடரை வேறு இடத்துக்கு மாற்ற ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.
பெண்களுக்டகான T-20 உலக கோப்பை தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐ.சி.சி கேட்டது மறுப்பு தெரிவித்து, ஏனெனில் அக்டோபர் மாதம் இந்தியாவில் மழைக்காலம் தவிர அடுத்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கான உலக கோப்பை ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. இதனால் அடுத்தடுத்து உலக கோப்பை தொடரை நடத்தும் நிலை ஏற்படும் என்பதால் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் இலங்கை அல்லது ஐக்கியஅரபு எமிரேட்சில் T-20 உலக கோப்பை தொடர் நடத்தப்படலாம். இதுகுறித்து ஆகஸ்ட் 20ல் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
0
Leave a Reply