ராஜபாளையத்திற்கு சிறப்பு சேர்க்கும் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை
பல்வேறு சிறப்புகள் கொண்ட ராஜபாளையத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையில் பல்வேறு வகையான மூலிகைகள் உள்ளன. சஞ்சீவி மலை ராமாயண இதிகாசத் தில் அம்பு காயம் பட்டு உயிருக்கு போராடிய லட்சுமணனின் உயிரை காக்கும் பொருட்டு பர்வத மலையை அனுமன் தூக்கி வரும்போது வழியில் ஒரு சிறு துண்டு விழுந்த பகுதியே சஞ்சீவி மலை என்று அழைக்கப்படுவதாக கூறப்ப டுகிறது.கார்த்திகை தீப திருநாளில் இம்மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. அதோடு கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகள் மலையடிவாரத்தில் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. மழை இல்லாத வறட்சிக் காலகட்டங்களில் மழை வேண்டி இம்மலையின் உயரத்தில் இருக்கக்கூடிய உருண்டை பாறைக் கற்களை, கீழே உருட்டி விடுவதன் மூலமாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்துள்ளனர்.
0
Leave a Reply