சேமியா பிரியாணி
தேவையான பொருட்கள் - ஆட்டுக்கறி 200 கிராம், சேமியா 200 கிராம், டால்டா 100 கிராம், தக்காளி 250 கிராம், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 4, மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி, கொத்தமல்லித்தூள் 2, இஞ்சி 1 துண்டு, பூண்டு 10 பல், பட்டை கிராம்பு சிறிது, ஏலக்காய் 5, உப்பு தேவையான அளவு
செய்முறை - முதலில் கறியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றை அம்மியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளிப்பழம், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றி அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு பின் தக்காளி துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.
நன்றாக வதக்கி நறுக்கி வைத்துள்ள கறியைப் போட்டு கிளறி, அதனுடன் அரைத்த இஞ்சியை போட்டு கிளறி வதக்கவும். மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள், மஞ்சள்தூள், உப்பு இவைகளைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கறி நன்றாக வெந்ததும் சேமியாவைப் போட்டு கிளறி மூடி வைக்கவும். சேமியா வெந்து,வற்றி வருகையில் இறக்கி வைக்க வேண்டும். இதுவே சேமியா பிரியாணி. இது சாப்பிட சுவையாக இருக்கும்.
0
Leave a Reply