விளையாட்டு போட்டிகள் 20TH MARCH
நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று மார்ச் 25ல் துவங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் உலகத்தரவரிசையில் 126 வது இடத்திலுள்ள இந்திய அணி, 162வது இடத்திலுள்ள மாலத்தீவுக்கு எதிராக நட்பு போட்டியில் மோதியது.
இப்போட்டி, மேகா லயாவின் ஷில்லாங்கில் உள்ள நேரு மைதானத் தில், முதன் முறையாக நடந்தது. ஓய்வுக்குப் பின் நேற்று மீண்டும் வந்த சுனில் செத்ரி, கேப்டனாக களமிறங்கினார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தவிர 2021க்குப் பின் மாலத்தீவு அணிக்கு எதிராக களமிறங்கினார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன்
டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா' பாரா விளையாட்டு 2வது சீசன் இன்று முதல் மார்ச் 27 வரை நடக்கிறது. இதில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தட களம், வில்வித்தை, பவர்லிப்டிங், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல் என 6 வகையான விளையாட்டு நடத்தப்படுகிறது. இதற்கான போட்டிகள் டில்லியில் உள்ள மூன்று மைதானங்களில் நடக்கின்றன. இன்று, டில்லியில் உள்ள இந்திரா உள்ளரங்கு மைதானத்தில் துவக்க விழா நடக்கிறது. பாராலிம்பிக்' கில் இந்தியாவுக்கு 9 தங்கம் உட்பட 29 பதக்கம் கிடைத்தது.
தேசிய துப்பாக்கிசுடுதல் போட்டி
தமிழக காவல்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஒத்தி வாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி வளாகத்தில், 25வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி,நேற்று துவங்கியது. பல மாநில போலீசார், எல்லை பாதுகாப்பு படை, சி.ஆர். பி.எப்., என 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.இதன் துவக்க விழா நேற்று சென்னை, ஊன மாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் நடந்தது.
மும்பை கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.
மும்பை, மார்ச் 20-சென்னைக்கு எதிரான லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப் பட்டார்.சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மார்ச் 22 ல் நடக்க உள்ள ஐபி எல்., லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். சமீபத்தில்இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரை சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றிருந்தது.
செஸ்
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோண வள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 4வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா, ஆஸ்திரியாவின் பெடெல்காமோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 27வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
தடகளம்
இந்திய ஓபன் எறிதல் போட்டிக்கான 4வது சீசன் நவி மும்பையில், இன்று துவங்குகிறது. ஈட்டி எறிதலில் இந்தியாவின் ரோகித் யாதவ், ஷிவ்பால் சிங், சாஹில் சில்வால் பங்கேற்கின்றனர்.
0
Leave a Reply