சுப்மன்கில் ஐ.சி.சி., தரவரிசையில் ‘நம்பர்-1’
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கவுன்சில் கிரிக்கெட்(ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய துவக்க வீரர் சுப்மன் கில்,817 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவர்,வங்கதேசம் (101*), பாகிஸ் தானுக்கு (46) எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நல்ல துவக்கம் கொடுத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக சதம்(100*) விளாசிய இந்தியாவின் கோலி,743 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்து 'நம்பர்-5' இடத்துக்கு முன்னேறினார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா(757 புள்ளி) 3வது இடத்தில் நீடிக்கிறார்.வங்கதேசத்துக்கு எதிராக 41* ரன் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் லோகேஷ் ராகுல்(627)15வது இடத்துக்கு முன்னேறினார்.ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்டர் தரவ ரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் நம்பர் -1' இடத்தில் நீடிக்கிறார்.
டில்லியில், 2023ல் நடந்த உலக கோப்பை போட்டி யில் ஆப்கானிஸ்தான் அணி (49.5 ஓவரில் 284), இங்கிலாந்தை (40.3 ឈល់ 215) 69 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.. நேற்றும் இங்கிலாந்தை வீழ்த்தியது.
0
Leave a Reply