25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


புராஸ்டேட் சுரப்பி வீக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புராஸ்டேட் சுரப்பி வீக்கம்.

வயதாகும்போது அடிக்கடி சிறுநீர் வருவது, அதைச் சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போவதும் உண்டு. உடலளவிலும், மனதளவிலும் துன்புறுத்தும் இத்தொல்லையைப் பற்றி சற்று விவரமாகத் தெரிந்துகொள்வோம்.

வயது ஆக ஆக, பகலில் சிறுநீர் செல்வது குறைந்து, இரவில் அதிகமாகும். பகலில் ஏழு முறை மேலும் இரவில் இரண்டு முறை மேலும் சிறுநீர் கழித்தால் அது வழக்கத்தைவிட அதிகமாகும். ஆனால் இதை குடிக்கும் நீரின் அளவு, தட்பவெப்ப நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் அடிக்கடி சிறுநீர் சென்றாலும் ஒருநாளில் செல்லும் சிறுநீரின் மொத்த அளவு அதிகரிக்காது.

அடிக்கடி சிறுநீர் வருவதற்கான காரணங்கள்

முதுமை வயது ஆக அடிக்கடி ஆகச்சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.

 அளவுக்கு அதிகமாகத் தண்ணீர், பானங்கள் (டீ, காபி) மற்றும் மது அருந்துதல்.

நீர் மாத்திரை, ரத்த அழுத்த மாத்திரை, மூட்டு வலிக்குக் கொடுக்கும் மாத்திரை.

இதயம் பலவீனமடைதல்.

தூக்கமின்மை.

புராஸ்டேட் சுரப்பி வீக்கம்.

சிறுநீர்த் தாரையில் பூச்சித் தொல்லை.

நீரிழிவு நோய்மற்றும் சிறுநீரகம் செயலிழத்தல்.

மலம் இறுகி அடைப்பு ஏற்படுதல்.

சிறுநீர்ப்பையில் கல் மற்றும் கட்டி.

பக்கவாதம் போன்ற நரம்பு வியாதிகள்.

மருத்துவ முன்னேற்றத்தினாலும், மக்களிடையே உடல்நலம் பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வினாலும் மனிதர்களின் வாழும் நாட்கள் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில்,50 வயதைக் கடந்த ஆண்களில்50 சதவீதமும்,85 வயதுக்கு மேற்பட்டவர்களில்90 சதவீதமும் புராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News