தமிழுக்கு வரும் தபு.
நடிகை தபு, தமிழில் கடைசியாக 2000ல் வெளியான 'சிநேகிதியே' படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில், இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.
0
Leave a Reply