அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது
அட்லான்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடு ஒன்று சேராது தெரியுமா? இரண்டு கடல்களுக்கும் இருக்கும் வெவ்வேறு நீரின் அடர்த்தி, வெப்பம், உப்புத்தன்மையே இதற்கு காரணமாகும்.இதுபோன்று இந்தியாவிலும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. இங்கே உள்ள இரண்டு ஆறுகள் கலந்தாலும் ஒன்று சேருவதில்லை. இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் தேரி கார்வால் மாவட்டத்தில் தேவ்பிரயாக் என்னும் இடத்திலே இந்த இரண்டு நதிகளின் சங்கமம் நிகழ்கிறது. இங்கு தான் அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது.
.அலக்நந்தா ஆறு சதோபாந்த் அடிவாரத்தில் பத்திரிநாத்திலிருந்துஉருவாகி வருகிறது. பாகிரதி கௌமுக் அடிவாரத்தில் கங்கோத்ரியிலிருந்து உருவாகி வருகிறது. இந்த இரண்டு ஆறுகளும் சேர்ந்து தான் கங்கையை உருவாக்குகிறது. அலக்நந்தா ஆறு சற்று மண் கலந்த நிறமாக இருக்கும். இதுவே பாகிரதியோ பச்சைபசேலென்று அழகாக இருக்கும். இந்த இரண்டு நதிகளுமே ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேவபிரயாக் ரிஷிகேஷில் இருந்து70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து2723 அடி உயரத்தில் உள்ளது.இங்கிருக்கும் புனிதமான நீரூற்றான பைத்தல்ஷிலா(Baitalshila) மருத்துவ குணங்களை கொண்டது என்று கூறுகிறார்கள். அதனால் பக்தர்கள் இவ்விடத்திற்கு வந்து இந்த நீரூற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர் .
0
Leave a Reply