25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அலுவலகத்தில் கணினி திரை பார்த்து கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அலுவலகத்தில் கணினி திரை பார்த்து கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்.இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம். இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் ' இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது. 

கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப் பதம் இருக்காது.

ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரண மாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கைத்  தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும். 

கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான  திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான. அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, பீச், வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News