25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


மாபெரும்  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது, வேலை நாடுநர்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர்,  மாவட்ட   வேலைவாய்ப்பு  மற்றும்  தொழில்நெறி  வழிகாட்டும்  மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்   மாபெரும்   தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் நடத்தப்படவுள்ளது.அதன்படி , படித்த   வேலை  தேடும்  இளைஞர்களுக்காக  வரும் 22.08.2026 அன்று  சனிக்கிழமை   காலை 09.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை   வேலைவாய்ப்பு  முகாம்,  விருதுநகர்-சிவகாசி மெயின் ரோடு, ஆமத்தூரில் அமைந்துள்ள ஏ.ஏ.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் எம்ஆர்எஃப் டயர்ஸ், ஹுண்டாய் மோட்டார்ஸ், வி.வி.வி & சன்ஸ் எடிபில் ஆயில்(இதயம்), ராயல் என்பீல்டு, மீனாட்சி மிஷன் ஹாஸ்பிடல், டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, அடையார் ஆனந்தபவன், சென்டர்சாஃட் டெக்னாலஜிஸ், சால்காம்ப் போன்ற  100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்கள தெரிவு செய்யவுள்ளார்கள்.

இந்த  அரிய வாய்ப்பினை பயன்படுத்த   விரும்பும் வேலைநாடுநர்கள் 22.08.2026  அன்று  மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு  முகாம்  நேர்காணலில் கலந்து  கொள்ளவதற்கு  முன்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு இணையத்தில்   தங்களது சுய  விவரங்களை  பதிவு  செய்துவிட்டு  சுய விவரச் சான்றிதழ்  (RESUME)> அனைத்து   கல்விச்சான்றிதழ்,   ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன்  கலந்து  கொள்ளுமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும்  இச்சேவையானது   முற்றிலும்   கட்டணமில்லா சேவையாகும்.

மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள்  முகாமிற்கு பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணிற்கு (9360171161) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது  என  மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள்  தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News