அக்டோபர் முதல் 6 மாதங்களுக்கு தனியாரிடம் மின் கணக்கீடு பணி!
மின் வாரியத்தில் மின் மீட்டர் ரீடிங் மற்றும் கட்டணம் கணக்கிடும் பணி, அக்டோபர் மாதம் முதல் 6 மாத காலத்திற்குத் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- பணி: வீடு, கடை, அலுவலகங்களில் மின் மீட்டர் ரீடிங் எடுப்பது.
- கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி (12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை) மற்றும் மொபைல் போன் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
- பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாகத் தேவைக்கேற்ப.
- விண்ணப்பிக்கும் முறை: தனியார் நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்பு மூலம் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பிக்கலாம் (விவரங்கள் விரைவில்).
முக்கியக் குறிப்பு: இது மின்வாரியத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சி அல்ல. மீட்டர் ரீடிங் பணிக்கு மட்டுமே தற்காலிக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற அனைத்துப் பணிகளும் மின்சார வாரியத்திலேயே தொடரும்.
0
Leave a Reply