விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் வாரம் ஒரு நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்குட்டபட்ட நகராட்சிகளில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறவும், நடைபெற்றுவரும் பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வாரம் ஒரு நகராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 26.09.2024 அன்றும், அருப்புக்கோட்டை நகராட்சியில் 03.10.2024 அன்றும், விருதுநகர் நகராட்சியில் 10.10.2024 அன்றும், சாத்தூர் நகராட்சியில் 17.10.2024 அன்றும் மற்றும் இராஜபாளையம் நகராட்சியில் 24.10.2024 அன்று பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாணும் பொருட்டும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
எனவே, அந்தந்த நகராட்சிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
0
Leave a Reply