25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்  (12.01.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த திருமதி கமலி என்பவரின் மகள் செல்வி யாசிகா என்பவருக்கு தீருதவித் தொகை ரூ.12 இலட்சத்திற்கான காசோலையினையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்த 2 நபர்களின் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும், தகுதியான மூன்று நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஒப்படைப்பு ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

         மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986 மற்றும் குழந்தைத் தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2016-ன் கீழ், மீட்கப்பட்ட 5 வளரிளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், PMJJBY-திட்டத்தின் கீழ், தாமோதரன் என்பவருக்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த திரு.பூமிராஜன் என்பவரின் மகன் திரு.அஜித்குமார் என்பவருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

          தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4-நபர்களுக்கு ரூ.19,200/- மதிப்பில் காதொலிக்கருவிகளையும், 5-நபர்களுக்கு ரூ.12,500/-மதிப்பில் கைக்கடிகாரங்ளையும் மொத்தம் ரூ.31,700/-மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.காளிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News