25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >>


தி இந்தியா 'ஏ' அணி சாம்பியன்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தி இந்தியா 'ஏ' அணி சாம்பியன்!

இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ,இறுதிப்போட்டியில் இந்தியா 'ஏ' அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

தம்புலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பைனலில், இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை 'ஏ' அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

378 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 'ஏ' அணி, முத்தரப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News