25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


அமைச்சர் அவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அமைச்சர் அவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை தொடங்கி வைத்தார்.

  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை(12.10.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவர்களுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரிக்கு வரும் மாணவ/மாணவிகள் அரசு பேருந்துகளில் சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் உள்ள ரிசர்வ் லயன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ கல்லூரிக்கு நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. ஆகையால், கல்லூரிக்கு சென்று வர ஏதுவாக கல்லூரியிலிருந்து சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவ/மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையினை ஏற்று  கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்லூரி நேரங்களான காலை 08.10 மணிக்கு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கும் மற்றும் மாலை 03.10 மணிக்கு கல்லூரியில்  இருந்து  புறப்பட்டு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்றடையும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News