கிராமப்புற பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவு சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் தொடர்பாக பாலின வள மையங்கள் செயல்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பாலின் பாகுபாடு தொடர்பான பிரச்சனைகளை களைவது குறித்த செயல்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் யாலிக சமத்துவம், குழந்தைகள் திருமணம், குடும்ப வன்முறை, பாலின வன்முறை ஆகியவற்றால் தனிநபர் மற்றும் சமூகம் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு உரிமைகள், மருத்துவம், உளவியல் சட்டம், தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பிற ஆலோசனை ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் கிராமப்புற பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஆதரவு சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல் தொடர்பாக பாலின வள மையங்களை (GRC – Governance, Risk and Compliance) சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் 25.11.2024 முதல் செயல்படுகிறது.
மேலும் பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சாரம் 25.11.2024 முதல் 24.12.2024 வரை அனைத்து ஊராட்சி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S ,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply