உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
விருதுநகர்மாவட்டம், சாத்தூர்வட்டம், பந்துவார்பட்டிஊராட்சியில்இன்று(07.10.2025) நடைபெற்ற“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I.A.S.., அவர்கள் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உங்களுடன்ஸ்டாலின் முகாமானது15.07.2025 முதல்நடைபெற்றுவருகிறது.இத்திட்டத்தின்கீழ்விருதுநகர்மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளானசிவகாசிமாநகராட்சி,5 நகராட்சிகள்மற்றும் 9 பேரூராட்சிபகுதிகளில் 120 முகாம்கள்எனமொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது.இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது.
இம்முகாம்களை அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு, அரசு அலுவலர்களுக்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி, சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் என்ற சிறப்புமுகாமினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, மனுக்கள் பதிவேற்றம் செய்வது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு பிரிவுகள் உள்ளிட்டவைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இம்முகாம்கள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கைஎடுக்கப்படும். இம்முகாம்களில் வழங்கப்படும் மனுக்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கான ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். பின்னர், இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில்பெறப்பட்ட மனுக்களில்பரிசீலனைசெய்யப்பட்டு, உடனடிதீர்வாகமின்னணுகுடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, இணைய வழிப்பட்டாக்கள், மின் இணைப்பில் பெயர் மாற்ற ஆணை உள்ளிட்டவைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார். இம்முகாமில் எதிர்வரும் 11.10.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவிருக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply