மூலிகைகளின் சிகரம் வில்வம்
பழங்களில் புனிதமானது மற்றும் மூலிகைகளின் சிகரம் என்ற பெயர் பெற்றது வில்வம். பொதுவாக, வில்வ மரத்தை கோவில் நந்தவனம், பழத்தோட்டங்களில் காணலாம்.
சிலர் இதன் மருத்துவ குணங்களை அறிந்து வீடுகளில் வளர்க்கின்றனர். வில்வம் விதை களை ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கலாம். தொடர்ந்து வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் போன்ற இயற்கை உரங்களை இ இட்டு போதிய அளவு நீர் பாய்ச்சி வந்தால், 5 ஆண்டுகளில் வில்வ மரம் காய்க்க தொடங்கிவிடும். வில்வ மரம் ஆண்டிற்கு 400 பழங்கள் தரும். பெரிய பழமாக இருந்தால் சுமார் 250 பழங்கள் வரை கிடைக் கும்.
மாம்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிக சத்துக்கள் வில்வம் பழத்தில் நிரம்பியுள்ளன. வில்வம் காய் உருண்டையாக, ஓடு கடினமானதாக, பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை கொண்டது. வில்வம் பழம் குடல் சார்ந்த பிரச்சினைகளை குண மாக்கும். நன்றாக நன்றாக பழுத்த பழம் சாப்பிடபழம் சாப்பிட சுவையாகவும், உடல் வெப்பத்தை தணித்து, மலச்சிக்கலை நீக்கி உடலுக்கு சுறுசுறுப்பை தரும். உடலுக்கு பலம் தருவதுடன், மூலம் நோயை தணிக்கிறது.
வில்வம் இலையை அரைத்து பொடியாக்கி தினமும் காலை சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவாகும். சளி, இருமல், பல் சம்பந்தப்பட்ட பிரச் சினைகளுக்கு வில்வம் பொடியை பயன்படுத்தி வந்தால் பாதிப்புகள் நீங்கும். வில்வம் பழத்தில் வைட்டமின் பி1, பி2, தயாமின், புரதம், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறன.வில்வம்பழத்தை உண்டால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.
0
Leave a Reply