பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்தடை ஏற்படாமல் தமிழக மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. மகிழ்ச்சியான அறிவிப்பு
கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை தாண்டக்கூடும் என்கிறார்கள்.காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும். இந்த வருடம் ஜனவரியிலேயே,17000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டதுபொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டணம் வசூலித்தாலோ புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, தமிழகத்தில் மின்சார நுகர்வு புதிய உச்சத்தையும் கடந்த வாரம் எட்டியது.435.85 ஜிகாவாட் ஹவர் அளவுக்கு மின்சார நுகர்வு இருந்துள்ளது.. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில் வீடு, அலுவலகங்களில் ‘ஏசி’ பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் திருவிழா ஒருபக்கம் நடந்துவந்த நிலையில், இரவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட், பகலில் விவசாயத்திற்கு அதிக மின் வினியோகம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எனவே, மின் நுகர்வு இதுவரை இல்லாத அளவாக இம்மாதம் 17ம் தேதி 44.27 கோடி யூனிட்களாக அதிகரித்தது.
தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 55 லட்சம் யூனிட் உயர்ந்து,44.82 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதனால் மின் தேவை இம்மாதம் 20000 மெகா வாட்டை தாண்டி 20125 மெகா வாட்டாக இருந்தநிலையில், கடந்த நேற்றுமுன்தினம் 18ம்தேதி, உச்சத்துக்கு சென்றுவிட்டது.தமிழகத்தில் மின் நுகர்வு 20341 மெகா வாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டிவிட்டது.இதுகுறித்து மின் வாரியம் அறிக்கை ஒன்றையும் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் “18ம் தேதி மீண்டும் புதிய உச்சம் தொட்டது, நம்முடைய மாநிலத்தின் மின் தேவை மற்றும் மின் நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் சீரான மின் வினியோகம் உறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
0
Leave a Reply