அகத்திக் கீரை உணவில் சேர்த்துக் கொள்ள....
அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்.கண்கள் குளிர்ச்சியாகும்.மலம் இலகுவாகப் போகும். சிறுநீர் தடையில்லாது தாராளமாகப் போகும்.நீரடைப்பு, பித்த மயக்கம் இவை நீங்கும் .அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால் விரைவில் ஆறும், சீழ் பிடிக்காது.
அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால், ரத்த சோகையை குணமாக்கும். ரத்த அழுத்ததை சம நிலையில் வைத்திருக்கும்.நெஞ்சு சளி, தோல் நோய் போன்றவைகளுக்கு அகத்திக் கீரை நல்ல பலனை தரும்.வாய்ப் புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக் கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் விரைவில் குணமாகும். அகத்திக் கீரை வயிற்றுப் புண் என்னும் பெப்டிக் அல்சர் நோயைக் குணப்படுத்துகிறது.
அகத்தி கீரை, தேங்காய் பால் சேர்த்து முன்பெல்லாம் தண்ணீர் சாறு ஒன்று ஒன்று ரசம் போல வைப்பார்கள். அது வயற்று புண், வாய் புண் இவைகளை ஆற்றும். இப்போது அப்படி வைத்து தருபவர்கள் அதிகம் இல்லை.அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
0
Leave a Reply