கல்லீரலைப் பாதுகாக்க......
கல்லீரல்.எப்போதும் முழு செயல் திறனுடன் இயங்கும் விதத்தில் பாதுகாத்து வந்தாலே அநேக நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாது காத்திட முடியும்.கல்லீரல் பாதிப்பால் வரும் நோய்களில் முக்கியமானது மஞ்சட் காமாலை. கல்லீரலை எளிதில் பாதிப்படைய செய்யும் மது போன்ற போதை பழக்கங்களை தவிர்த்தல். மற்றும் உணவில் காரம். உப்பு அளவுடன் சேர்த்துக் கொள்வது நலம்.காலை வேளையில் மிதமான சூட்டுடன் உள்ள நீரில்1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது. கல்லீரல் புத்துணர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. கல்லீரலில் சேதமுற்ற செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்க மிகவும் துணை புரியும்.நன்மை செய்யும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்; கல்லீரலைப் பாதிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கல்லீரை பாதுகாக்கும் உணவகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ,விஷ்ணு கிரந்தி போன்றவை கல்லீரலைப் பாதுகாக்க உதவுகிறதாம்
0
Leave a Reply