25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். “ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு கோஷங்கள் முழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என்ற ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தினர். மேலும், நவதானியங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கோலம் மூலம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி, 100% வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News