விருதுநகர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தனித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என அனைத்து மாணவர்களையும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 561 மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 190 மாணவர்கள் உயர்கல்வி, ஐ.டி.ஐ, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேரவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக சிறப்பு முகாம் 27.08.2026 அன்று பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், 28.08.2026 அன்று சிவகாசி நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளன.
இந்த சிறப்பு முகாமில், மாணவர்களிடமிருந்து, உயர்கல்வி பயில்வதற்கான சந்தேகங்கள் மற்றும் குறைகளையும் கேட்டறிந்து மாணவர்கள் உயர்கல்வி சேர்வதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி, பள்ளிப் படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, தொழிற்கல்வி படிப்புகளான ITI மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், கல்லூரி முதல்வர்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply