25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள். 26 TH AUGUST
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள். 26 TH AUGUST

ஆசிய ஜூனியர் செஸ்

மும்பையில் ஆசிய ஜூனியர் கிளாசிக்கல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகள் முடிவில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பிரதிதீ (13 வயது, 5 மாதம்) 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஓபன் பிரிவில் இந்தியாவின் மயங்க் 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனார்.

டென்னிஸ்

மெக்சிகோவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி–அனிருத் சந்திரசேகர் ஜோடி 6-3, 7-6 என்ற செட் கணக்கில் மெக்சிகோவின் மைக்கேல் வரேலா–ரஷ்யாவின் இவான் ஜோடியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

உலக செஸ் தொடர்

ஹங்கேரியில் முதன்முறையாக ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூர் பைலட்’ தொடர் நவம்பர் 10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகின் நம்பர்-1 வீரர் கார்ல்சன் (நார்வே), நம்பர்-2 வீரர் பேபியானோ (அமெரிக்கா) உள்ளிட்ட 18 பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா சார்பில் நார்வே மற்றும் செயின்ட் லூயிஸ் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி மற்றும் அர்ஜுன் எரிகைசி ஆகிய 3 பேர் பங்கேற்க உள்ளனர்.

காமன்வெல்த் கியூ விளையாட்டு

காமன்வெல்த் கியூ விளையாட்டு (ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ்) சீசன்-2 போட்டிகள் ஆமதாபாத்தில் அக்டோபர் 7 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 46 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் 6 வீரர்கள், 7 வீராங்கனைகள் என மொத்தம் 13 பேர் கொண்ட அணி பங்கேற்க உள்ளது.

ஸ்குவாஷ்

ஹங்கேரியில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வேலவன் செந்தில் குமார் 3-0 (11-9, 11-6, 11-5) என்ற கணக்கில் பிரிட்டனின் வில் சால்டரை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News