25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


பரோட்டாவிற்கு மிகவும் பிரபலமான விருதுநகர்  உருளைக்கிழங்கு சால்னா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பரோட்டாவிற்கு மிகவும் பிரபலமான விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா

 தேவையானவை :  
வெங்காயம் – 1 .
தக்காளி – 2 .
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.
கருவேப்பில்லை – ஒரு கொத்து.
மஞ்சள் பொடி – 1 /4 தேக்கரண்டி.
சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா – 1 தேக்கரண்டி.
காய்கறிகள் – 1 கப் ( நான் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சேர்க்கலாம்).
தேங்காய் – 1 / 4 கப்.
கொத்துமல்லி – ஒரு கை.
எண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு -1 / 4 தேக்கரண்டி.
வறுத்து அரைப்பதற்கு :
நிலக்கடலை – 1 தேக்கரண்டி.
வர மல்லி – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 5 .
கசகசா – 1 / 2 தேக்கரண்டி .
பட்டை – 2 ( 1 ” அளவு ).
கிராம்பு – 3 .
செய்முறை : வெங்காயம்மற்றும்தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில்மிதமானசூட்டில்நிலக்கடலை , வரமல்லி , மிளகாய் , பட்டை , கிராம்பு சேர்த்து நன்றாக நிறம் மாறி , நறுமணம் வரும் வரை வறுக்கவும்.பின்பு வறுத்த பொருட்களை பொடியாக அரைத்து கொள்ளவும்.  வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொரியும் வரை வதக்கி , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி , இஞ்சி பூண்டு விழுது , கருவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் . மசாலா பொடிகளை சேர்த்து , மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா , வறுத்து அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி , நறுக்கிய காய்கறிகளை சேர்த்து , உப்பு ,3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துவைத்து கொள்ளவும். சால்னாவில் காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு , அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். இறுதியாக மல்லி தழை தூவி இறக்கி , பரோட்டாவுடன் பரிமாறவும்.இந்தசால்னாசப்பாத்தி ,தோசையுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.

மசாலா வறுக்கும் பொழுது , சிறிது கரு நிறமாக வறுத்தால் நமக்கு ஹோட்டலில் வாங்கும் சால்னா போன்ற நிறம் கிடைக்கும் (ஆனால் கருகிவிடக்கூடாது).
விருப்பம்போல்சிக்கன் , கேரட் , பீட்ரூட் ,கோஸ் , பட்டாணி ,முட்டைஎதுவேண்டுமானால் சேர்க்கலாம்.காய்களை மசிய வேகவைக்க வேண்டாம்.வேகும் பதம் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..தண்ணீர் உங்களுக்கு வேண்டுமான அளவு சேர்க்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News