25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


அவுரி மூலிகைசெடி சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவுரி மூலிகைசெடி சாகுபடி.

"அவுரி' என்னும் மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை ஊடு பயிராக பயிரிட்டு ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் வரை சத்தமில்லாமல் வருவாய் ஈட்டலாம்.தூத்துக்குடி சென்னா என்றழைக்கப்படும் இந்த மூலிகைச் செடிகள் 90 நாட்கள் பயிராகும். ஆண்டுதோறும் பருவ மழையை ஒட்டி நவம்பர் இறுதியில் விதைள் விதைக்கப்படுவது வழக்கம். எக்டேருக்கு 20 கிலோ விதை விதைத்தால் போதுமானது.களை எடுப்பு மற்றும் உரம் போட தேவையில்லை. அதுவாகவே வளர்ந்து பயன்தரக் கூடியது.

முறைகள்

செடிகள் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பூ பூத்து, காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும்.

மல்லிகைக்கு ஊடு பயிராக இந்த "அவுரி'யை பயிரிட்டுள்ளேன். வறட்சியை தாங்கி விளையக்கூடியது. குறைந்த அளவே தண்ணீர் போதுமானது.

எக்டேருக்கு ஒரு டன் வரை காய்ந்த இலைகள் மற்றும் காய்கள் கிடைக்கும். இவற்றை மொத்தமாக சேகரித்து தூத்துக்குடி மொத்த வியாபாரிகளிடம் விற்று விடுவேன். இதனால், விவசாய செலவு போக ஆண்டு தோறும் குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்

அவரியில் கே கே எம் செ 1 மற்றும் ஏ.எல்.எஃப் டி 2 ஆகிய இரண்டு இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கே கே எம் செ 1 தமிழகத்தில் செய்ய ஏற்ற இரகமாகும்.ஒரு எக்டருக்கு சுமார் 15 முதல் 20 கிலோ அவுரி வதைகள் தேவைப்படுகின்றது.

அவுரியை பிப்ரவரி - மார்ச் மற்றும் ஜீன்-ஜீலை மாதங்களில் சாகுபடி செய்யலாம்.

ஒரு எக்டருக்கு10,15 டன் மட்கிய தொழுவுரம் மற்றும் முறையே25,25 மற்றும்40 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை இடவேண்டும். தழைச்சத்தினை இரண்டு பிரிவுகளாக பிரித்து விதைத்த40 மற்றும்80வது நாட்களில் இடவேண்டும். அவுரியின் செயற்பாடு, அங்கக மற்றும் செயற்கை உரங்களை இணைந்து அளிக்கும்போது மேம்படுகின்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News