சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது..?
இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் இன்றியமையாத ஒன்று. பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.
இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள்நிறைந்துள்ளன.இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், வகை2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமன்றி இது மூளைக்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.
ஆலிவ் எண்ணெயில் ஆல்பாலினோலெனிக் அமிலம் உள்ளது. அது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. வீக்கம், வாதம் ஆகிவற்றை சரிசெய்யவும் இது உதவுமாம்.இது தவிர எள் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, எள் எண்ணெயில் ஆக்ஸிஜினேற்ற மற்றும் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது.
0
Leave a Reply