ஏன் பிரியாணியில் ஏலக்காய் சேர்க்கிறார்கள்?
ஏலக்காயை இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருள் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அசைவ உணவுகளில் வாசனைக்காக அதிகமாக பயன்படுத்தப்படும். அதுமட்டும் அல்ல, தற்போது மக்கள் ஏலக்காயை பயன்படுத்தி காஃபி ,டீ ஆகியவற்றையும் தயார் செய்து வருகின்றனர்.
ஏலக்காய் உட்கொள்வது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டது. இது, லேசான இனிப்பு மற்றும் புதினா போன்ற சுவை கொண்டவை. எனவே, இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும், வாய் துர்நாற்றத்தைய கட்டுப்படுத்துகிறது.
ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உணவு மற்றும் காய்கறிகளின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டும் அல்லாது ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறுதாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசிஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது.
0
Leave a Reply