உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் - சிந்தாரோவ் மோதல்.
நடப்பு உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் எதிர்கொள்கிறார்.
இந்தப் போட்டி நவம்பர் 25 முதல் டிசம்பர் 15 வரை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறுகிறது. 14 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் வீரர் சாம்பியன் பட்டம் வெல்வார். 7-7 என சமநிலை ஏற்பட்டால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
2024-ல் உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ், தனது பட்டத்தை தக்கவைத்துக் கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
0
Leave a Reply