25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக சுகாதார தின நிகழ்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக சுகாதார தின நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் (07.04.2024) உலக சுகாதார தின நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார தினம் ஏப்ரல் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நோயை வரும் முன் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு எது மாதிரியான விழிப்புணர்வை நாம் தருகின்றோம் என்பது முக்கியம். சரியான உணவு, ஓய்வு, உடல் உழைப்பு இந்த மூன்றும் சரியாக இருந்தால் ஏறத்தாழ 70 சதவீத வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் வருவதை தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 நமது மாவட்டத்தில் பள்ளிகள் படிக்கக்கூடிய வளரிளம் பெண்கள் 13 வயதிலிருந்து 17 வயது வரை இருக்கக்கூடிய பெண்களில் இரத்தசோகை என்று சொல்லக்கூடிய ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கக்கூடிய குறைபாடு தொடர்பாக பரிசோதனை செய்ததில் ஏறத்தாழ பாதி பெண் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நோய் கிடையாது, இது ஒரு சத்துக் குறைபாடு ஆகும். ஆனால் இதனை சரி செய்வதற்கான ஒரே வழி அவர்களுக்கு சத்தான உணவை கொடுப்பது.இவற்றை கண்டறியாமல் விட்டுவிட்டால் அந்தப் பெண் திருமணம் ஆகி குழந்தைக்கு தாயாக உருவாகின்ற பொழுது அவர்களுக்கும், அந்த குழந்தையின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. இந்த ரத்த சோகை குறைபாட்டினை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதனை தவிர்க்கலாம்.

உலகத்தில் அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கக்கூடிய நாடாக 2030-ல் நமது நாடு வரப்போகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போதும் கூட கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் 10 இல் மூன்று அல்லது நான்கு நபர்கள் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உணவு பழக்க வழக்கம் மாறுதலினாலும், தூங்கக்கூடிய நேரம் குறைந்துவிட்ட காரணத்தினாலும் இது மாதிரியான வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் வருகின்றன.

உடல்நலத்திற்கு மிக முக்கியமானது சரியான உணவு, சரியான ஓய்வு, சரியான உடல் உழைப்பு இந்த மூன்றும் இல்லை என்றால் நம் உடல் நோயை உருவாக்கிக் கொண்டே இருக்கும். மேலும் உடல் நலத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ அதே போல் மன நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நான்கு நபர்களில் ஒருவருக்கு சற்று மனநலப் பிரச்சனையோடு இருக்கிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மனநல நோய்க்கு என்று தனியாக மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதில் ஆலோசனைகளை பெறுவதில் ஒரு சமூக தடை இருக்கின்றது. எதிர்மறையான பார்வை சமூகத்தில் இருக்கின்றது. இவற்றையெல்லாம் போக்கி பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

 மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு மாதங்கள் சரியான சிகிச்சை மேற்கொள்ளும் போது அது சரி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இன்று நிறைய மருத்துவ வசதிகள் இருக்கின்றன. நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. உடல் மற்றும் மன நலம் சார்ந்து நிறைய கருத்துக்களை பொது மக்களுக்கு எடுத்துச் சென்று சொல்வதிலும், அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களினுடைய உடல், மனநலத்திற்கு தங்களுடைய பணியை அர்ப்பணித்து கொள்வதற்கு இந்த நாளில் உறுதி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும், இந்த நிகழ்ச்சியில் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.முன்னதாக மரு.சுசித்ரா தேவி மனநலம் குறித்து பேசினார்.

 குடிபோதையில் இருந்து விடுபடுவது மற்றும் அதற்கான மன நல பிரச்சனைகள் சார்நத உணர்வில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் அரசு மருத்துவனையில் அதற்கான சிகிச்சை “குடி மற்றும் போதை மறுவாழ்வு” சிகிச்சை பிரிவு மூலம் வழங்கபடுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார். குழந்தைகள் நலம் குறித்து மரு.மஞ்சு பார்கவி குழந்தைகளுக்கு பாலூட்டும் முறை குறித்தும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பது குறித்தும் எடுத்துரைத்தார். மரு.அருணாச்சலம் வயதான பின்பு வரும் நோய்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் மற்றும் அவர்களை கவனித்து கொள்ளும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதை தொடரந்து, அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொண்ட கைகழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நடனம் மற்றும் மருந்தியல் கல்லூரியில் பயிலும் மாணவிகளின் குடிபோதை விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அலுவலர் மரு.கா.இளங்கோவன், மரு.ச.ஜெகமணி,மருத்துவர்கள்,செவிலியர்கள், மருந்தியல் கல்லூரி மாணவர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News