25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடைபெற உள்ளன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடைபெற உள்ளன.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைய தலைமுறையினரின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்-மன ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நோக்கில் 25.1.2026 முதல் 27.1.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தினைச் சார்ந்த அனைத்து (11 தொகுதிகள்) ஊராட்சி ஒன்றிய அளவில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளது.இந்த விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ.3,000/- பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.2,000/- மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு தலா ரூ.1,000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளது.இவற்றில் முதலிடம் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மேலும் விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டார (BLOCK LEVEL) அளவிலான விளையாட்டுப் போட்டிகள் விருதுநகர் மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெற உள்ளன.

 இராஜபாளையம் வட்டத்தில், பு.மூ.மாரிமுத்து நாடார் ஆண்கள்மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம்  காலை 08.00 மணியளவில், 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (பெண்கள்,) கேரம் (இரட்டையர்கள்) (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கபாடி(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(பெண்கள்), எறிபந்து (பெண்கள்), உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டி 100 மீ (ஆண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டி குண்டு எறிதல் (ஆண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கபாடி(ஆண்கள்), கயிறு இழுத்தல் போட்டி(ஆண்கள்), மட்டைப்பந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருவில்லிபுத்துார் வட்டம், மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள் மற்றும் பெண்கள், கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), எறிபந்து (பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

 சிவகாசி வட்டம், அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசியில், காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) கபாடி(பெண்கள்) கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்) கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கபாடி(ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், வெம்பக்கோட்டை வட்டம், P.S.R. பொறியியல் கல்லுாரி, அய்யநாயக்கன்பட்டி, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி(பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

 நரிக்குடி வட்டம், மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், நரிக்குடி முக்கு ரோடு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று எறிபந்து (பெண்கள்), கபாடி(பெண்கள்), கையுந்து பந்து(பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும், குண்டு எறிதல்)  (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி(ஆண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து(ஆண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், திருச்சுழி வட்டம், S.B.K மேல்நிலைப் பள்ளி, கல்லுாரணி காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து (பெண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

 காரியாபட்டி வட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, மல்லாங்கிணறு, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) ஆண்கள், கேரம் (இரட்டையர்கள்) ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கபாடி ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி ஆண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், கேரம் (இரட்டையர்கள்) பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள், கபாடி பெண்கள், கயிறு இழுத்தல் போட்டி பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

விருதுநகர் வட்டம், செந்திகுமாரநாடார் கல்லுாரி, விருதுநகர், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி ஆண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி பெண்கள், எறிபந்து பெண்கள், கையுந்து பந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், சாத்துார் வட்டம் SRNM கல்லுாரி, சாத்துார், காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கபாடி பெண்கள், கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி ஆண்கள், தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

 வத்ராயிருப்பு வட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி கூமாபட்டி, காலை 8.00 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), கபாடி ஆண்கள், கையுந்து பந்து ஆண்கள், கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்), ஆண்கள் உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று மட்டைபந்து (ஆண்கள்), எறிபந்து பெண்கள், கபாடி பெண்கள், தடகள விளையாட்டுப் போட்டிகள் (100மீ மற்றும் குண்டு எறிதல்) பெண்கள்  உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.மேலும், அருப்புக்கோட்டை வட்டம் ஸ்ரீ செளடாம்பிகை பொறியியல் கல்லுாரி, அருப்புக்கோட்டை, காலை 8.30 மணியளவில் 25.01.2026 அன்று கேரம் (இரட்டையர்கள்) (ஆண்கள் மற்றும் பெண்கள்), தடகளவிளையாட்டுப் போட்டிகள் (100மீ  மற்றும் குண்டு எறிதல்) பெண்கள், எறிபந்து பெண்கள், மட்டைபந்து (ஆண்கள்), கையுந்து பந்து (ஆண்கள் மற்றும் பெண்கள்), கயிறு இழுத்தல் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும், 27.01.2026 அன்று கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற உள்ளன.

, கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள இராஜபாளையம் வட்டம் திரு.K.மணிரத்தினம், (Cell:9940908430), திருவில்லிபுத்தூர் வட்டம் திரு. R.சுப்ரமணியன் (Cell:9751393412), சிவகாசி வட்டம் திரு. P.கார்த்திக், குத்துச்சண்டை பயிற்றுநர் (Cell:7339594617), வெம்பக்கோட்டை வட்டம் திரு. மகாராஜா (Cell:8667233423), நரிக்குடி வட்டம் திரு. நாகர்ஜீன் (Cell: 8939101902),  திருச்சுழி வட்டம் திரு.ஆறுமுகம் Cell:9655849601), காரியாபட்டி வட்டம் திரு. எம்.ரஞ்சித் (Cell:7530082477), விருதுநகர் வட்டம் திரு.நாகேந்திரன் (Cell:8940904377), சாத்துார் வட்டம் திருமதி. ஆர்.நாகஜோதி (Cell:9500760243), வத்ராயிருப்பு வட்டம் திரு.எம்.அருள்போஸ் (Cell: 9488887989), அருப்புக்கோட்டை வட்டம் திரு.பிரகதீஸ்வரன் (Cell: 8610515749) என்ற அந்தந்த வட்டாரப் பகுதி எண்களை தொடர்பு கொள்ளலாம்.எனவே, மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News