குழந்தைகளை அச்சுறுத்தும் 'SKELETAL CRISIS' – எலும்பு ஆரோக்கியத்திற்கு அதிகரிக்கும் ஆபத்து.
அதிகரித்து வரும் மொபைல் பயன்பாடு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் வாழ்க்கை முறை, போதிய சூரிய ஒளி கிடைக்காதது எனப் பல காரணங்களால் இந்தியக் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முந்தைய தலைமுறையினரைப் போல விளையாட்டு மற்றும் உடல் இயக்கங்களில் இன்றைய குழந்தைகள் அதிகம் ஈடுபடுவதில்லை. இதனால், குழந்தைகளிடம் எலும்பு வலிமை குறைபாடு மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தினசரி உடற்பயிற்சி, சத்தான உணவு மற்றும் போதிய சூரிய ஒளி கிடைப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
0
Leave a Reply