சிவப்பு அரிசி - தேங்காய்ப் பால் அல்வா
தேவையான பொருட்கள் : -சிவப்பு அரிசி - ஒரு கப், வெல்லம் - ஒன்றரை கப். தேங்காய்ப் பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - அரை கப், முந்திரி, பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை-: அரிசியை தேங்காய்ப் பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தை சூடாக்கி, அதில் அரைத்த அரிசி, தேங்காய்ப் பாலை விட்டு, வெல்லத்தைப் பொடித்து போட்டு, மிதமான தீயில் கிளறவும். கலவை இறுக ஆரம்பித்ததும் நெய் விட்டு கெட்டியாகக் கிளறி. ஏலக்காய்த்தூள், முந்திரி, பாதாம் துண்டுகளைத் தூவி தட்டில் கொட்டி, சிறிது ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
0
Leave a Reply