“ஸ்டீபிள் சேஸ்” ஓட்டத்தில் சாதனை படைத்த முதல் இந்திய வீரர். அவினாஷ் சபில்
“ஸ்டீபிள் சேஸ்” ஓட்டத்தில் சாதனை அவினாஷ் சபில்
“ஸ்டீபிள் சேஸ்” ஓட்டத்தில் சாதனை அவினாஷ் சபில் பாரிஸ் ஒலிம்பிக் தடகளத்தில் நேற்று ஆண்களுக்கான 3000 மீட்டர் “ஸ்டீபிள் சேஸ்” ஓட்டம் நடந்தது, இந்தியா சார்பில் அவினாஷ் சபில் பங்கேற்கிறார். தகுதிச் சுற்று 2-ல் ஓடி களமிறங்கினார் அவினாஷ் சபில் TOP-.5 இடம் பிடித்தால் பைனலில் பங்கேற்க தகுதி பெறலாம், என்ற நிலையில் முதல் இரு சுற்றில் முன்னணியில் வந்தார். பின் அடுத்தடுத்த சுற்றில் சற்று மெதுவாக ஓடினார். முடிவில் 8 நிமிடம் 15.43 வினாடி நேரத்தில் வந்து 5-வது இடம் பிடித்து, பைனலுக்குள் நுழைந்தார். இதையடுத்து “ஸ்டீபிள் சேஸ்” ஓட்டத்தில் பைனலுக்கு (ஆகஸ்ட் 8 இரவு 1.13 மணி )முன்னேறிய முதல் இந்திய வீரர் என சாதனை படைத்தார். அவினாஷ் சபில்,
இந்தியா, டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகளுக்கான ரவுண்டு 16 போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியா, டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகளுக்கான ரவுண்டு 16 போட்டியில் இந்தியா, ருமேனியா மோதின. இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கமத் ஜோடி 3-0, (11-5, 11-9, 11-9) என ருமேனியாவின் அடியானாவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
துப்பாக்கி சூடுதலில் நழுவிய வெண்கலம் ஒரு புள்ளியில் பறிபோன பதக்கம்.
ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் இந்தியா சார்பில் 21 பேர் பங்கேற்றனர். 3 வெண்கலம் வென்றனர். நேற்ற கடைசி போட்டி நடந்தது. ஸ்கீட் கலப்பு பிரிவில் இந்தியாவின் அனன்ஜீத் சிங் மகேஷ்வரி ஜோடி களமிறங்கியது. 1 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை இழந்தது.
0
Leave a Reply