அவல் பொங்கல்,அரிசி பொங்கலை விட அதிக ருசியுடன் இருக்கும்.
பயத்தம்பருப்பை வேகவைத்து, தேவையான அளவு அவலை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் நெய், எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதனுடன் வேகவைத்த பயத்தம் பருப்பு, ஊற வைத்த அவல், உப்பு சேர்த்து கிளறி, கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு குழைவாக கிளறி இறக்கினால், சுவையான அவல் பொங்கல், அரிசி பொங்கலை விட ருசியாக இருக்கும். இதற்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிடலாம்.
0
Leave a Reply