காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் நீங்க….
கோடை காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து விடும். அப்படி புளிக்காமல் இருக்க அதில் இஞ்சி ஒரு துண்டு மற்றும் தேங்காய் பத்தை ஒரு துண்டு போட்டு வைத்தால் சீக்கிரம் புளிக்காது.
நாம் வெங்காயம் நறுக்கும் போது கண்களில் தண்ணீர் வராமல் இருக்க கத்தியை அடுப்பில் சூடு செய்து விட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது
வாழை இலையின் பின் பக்கத்தை லேசாக நெருப்பின் அணலில் காட்டி அதன் பிறகு அதனை எவ்வளவு சுருட்டி பொட்டலம் போட்டாலும் கிழியாமல் இருக்கும்.
காய்கறி மற்றும் பழங்கள் வாங்கி வந்ததும், அதனை தண்ணீரில் போட்டு ஒரு சில துளிகள் வினிகர் ஊற்றி வைத்தால் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் இறந்து விடும்.
வெண்டைக்காய் காரக்குழம்பு செய்யும்போது வெண்டைக்காயை முதலில்2 ஸ்பூன் எண்ணெயில் நன்கு வதக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் அதிலிருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுருள வதங்கி விடும். அதன் பின் காரக் குழம்பில் சேர்த்தால் குழம்பின் ருசியே அலாதி.
0
Leave a Reply